ஆபரேட்டர் அட்டைகம்போஸ்டர் · கரிமக் கழிவு கம்போஸ்டர் (OWC)தமிழ் · Tamil
தினசரி பயன்பாடு
கம்போஸ்டர் · நிலையான இயக்க நடைமுறை (SOP)
1. கழிவை அரையுங்கள்
- கழிவைப் பிரித்தெடுங்கள்.பிளாஸ்டிக், கண்ணாடி, உலோகம், உணவு அல்லாத எதையும் எடுத்துவிடுங்கள்.
- ஷ்ரெடரைத் தொடங்குங்கள்.பின்பக்க லீவரைப் பயன்படுத்துங்கள். சரியான திசையில் சுழல்கிறதா எனப் பாருங்கள்.
- ஹாப்பரின் பக்கவாட்டில் நில்லுங்கள்.அதற்கு நேர் எதிரே நிற்காதீர்கள்.
- ஒரு முறைக்கு 5 கிலோ மட்டும், கொஞ்சம் கொஞ்சமாகப் போடுங்கள்.மேல் ஹாப்பரில் போடுங்கள். முழுத் தட்டையும் ஒரே தடவையில் கொட்டாதீர்கள்.
ஷ்ரெடர் ஓடும்போது கையை ஹாப்பருக்குள் விடாதீர்கள்.
- எல்லாக் கழிவையும் போட்ட பிறகு ஷ்ரெடரை நிறுத்துங்கள்.
2. ஷ்ரெடரைக் கழுவுங்கள்
- கிளீனிங் தட்டை உள்ளே தள்ளுங்கள்.பின்பக்க கிளீனிங் கதவு வழியாக.
- மேலிருந்து தண்ணீர் ஊற்றுங்கள்.தண்ணீர் ஷ்ரெடரைக் கழுவி, தட்டில் விழும்.
- தட்டை வெளியே எடுத்து, தண்ணீரைச் சாக்கடையில் ஊற்றுங்கள்.
3. கம்போஸ்டிங் தொடங்குங்கள்
- கொஞ்சம் நைசான மரத்தூள் போடுங்கள்.இன்ஸ்பெக்ஷன் கதவு வழியாக. அரைத்த கழிவு ஒவ்வொரு 30 கிலோவுக்கும் 1 கிலோ மரத்தூள்.
- எல்லாக் கதவுகளையும் மூடிப் பூட்டுங்கள்.
- ஸ்கிரீனின் இரண்டாவது பக்கத்துக்குப் போங்கள்.முதல் பக்கத்தில் பச்சை அம்புக்குறியை அழுத்திப் பிடியுங்கள்.
- Automatic mode-ஐ அழுத்திப் பிடியுங்கள்.டவர் விளக்கு பச்சையாகும்.
- கீழே வலது பக்க அம்புக்குறியை அழுத்துங்கள்.இந்தப் பக்கத்தில் எல்லா விளக்கும் பச்சையா எனப் பாருங்கள். ஏதாவது பச்சை இல்லையா? எங்களை அழையுங்கள்.
- இயந்திரத்தை வேலை செய்ய விடுங்கள்.ஒரு நாளில் 20 மணி நேரம் வரை ஓடும். தானாக நின்று, தானாக ஓடும்.
4. உரத்தை எடுங்கள்
- ஆம்பர் (மஞ்சள்) விளக்கு வரும்வரை காத்திருங்கள்.ஆம்பர் என்றால் உரம் தயார்.
- முன் கதவைத் திறங்கள்.
- கதவுக்கு முன்னால் ஒரு தட்டு வையுங்கள்.
- Discharge mode-ஐ அழுத்திப் பிடியுங்கள்.இது ஸ்கிரீனின் இரண்டாவது பக்கத்தில் உள்ளது. சுமார் 90% உரம் வெளியே வரும்.
உரம் வெளியே வரும்போது கதவுக்குள் கையை விடாதீர்கள்.
- மீதியை உள்ளேயே விடுங்கள்.உள்ளே விடும் 10% அடுத்த பேட்சுக்கு உதவும்.
- முன் கதவின் உள்பக்கத்தைச் சுத்தம் செய்யுங்கள்.உடனே செய்யுங்கள், உரம் காய்ந்து ஒட்டும் முன்.
- முன் கதவை மூடிப் பூட்டுங்கள்.
ஷ்ரெடர் பட்டன் ஸ்கிரீனில் இருக்கிறதா?
- ஸ்கிரீனின் மூன்றாவது பக்கத்துக்குப் போங்கள்.சில இயந்திரங்களில் ஷ்ரெடர் லீவரால் இல்லாமல் இங்கிருந்து ஓடும்.
- கம்போஸ்டிங் ஓடிக்கொண்டிருக்கிறதா? முதலில் Pause composter-ஐ அழுத்துங்கள்.
- ஷ்ரெடரைத் தொடங்க ON-ஐ அழுத்துங்கள்.சரியான திசையில் சுழல்கிறதா எனப் பாருங்கள்.
- முடிந்ததும் OFF-ஐ அழுத்துங்கள்.கம்போஸ்டிங் தானாக மீண்டும் தொடங்கும்.
தெரிந்து கொள்ளுங்கள்
நாங்கள் சொல்லாமல் செட்டிங்கை மாற்றாதீர்கள்.
ஃபீடிங் அளவுக்கு மேல் கழிவை நிரப்பாதீர்கள். அது முன் கதவு வழியாகச் சிந்தும்.
கம்போஸ்டிங் அறைக்குள் தண்ணீர் ஊற்றாதீர்கள்.
இயந்திரம் ஓடும்போது கதவுகளை மூடியே வையுங்கள்.
இயந்திரம் ஓடும்போது அதை நகர்த்தாதீர்கள்.
அவசரமா? ஸ்கிரீனில் உள்ள சிவப்பு EMERGENCY பட்டனை அழுத்துங்கள்.
டவர் விளக்கின் பொருள்
- பச்சை: கம்போஸ்டிங் நடக்கிறது.
- சிவப்பு: முன் கதவு திறந்துள்ளது.
- ஆம்பர் (மஞ்சள்): உரம் தயார்.
என்ன இடலாம்
இடலாம்
- அனைத்து உணவுக் கழிவுகளும்பழங்கள், காய்கறிகள், இறைச்சி, கோழி, மீன், ஓடுகள், எலும்புகள், பாஸ்தா, பேக்கரி பொருட்கள், சீஸ் மற்றும் முட்டை ஓடுகள்.
- உணவு படிந்த காகிதம்நாப்கின்கள், பேப்பர் டவல்கள், டீ பைகள் மற்றும் காபித் தூள்.
- செடிகள்பூக்கள், இலைகள், புல் மற்றும் சிறு கிளைகள்.
- சான்றளிக்கப்பட்ட மக்கும் பொருட்கள்மக்கும் பைகள் (ASTM D6400), மரக் குச்சிகள் மற்றும் சாப்ஸ்டிக்குகள்.
இடக்கூடாது
- திரவங்கள், கிரீஸ் மற்றும் சமையல் எண்ணெய்
- பிளாஸ்டிக், தெர்மாகோல், பார்சல் டப்பாக்கள் மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் கப்புகள்
- கண்ணாடி மற்றும் உலோகம்
- மெழுகுக் காகிதம் மற்றும் மெழுகு பூசிய அட்டை
- ரப்பர் பேண்டுகள், கம்பிக் கட்டுகள் மற்றும் ஸ்டிக்கர்கள்
- டயப்பர்கள்
- சான்றில்லாத 'மக்கும்' பொருட்கள்
கண்ட்ரோல் பேனலைத் திறக்கவோ வயரிங்கைத் தொடவோ வேண்டாம். மின் அதிர்ச்சி உணர்ந்தால், உடனே மெயின் MCB-ஐ அணைத்து எங்களை அழையுங்கள்.