பிரச்சனையா? விரைவுத் தீர்வு

கம்போஸ்டர் · பிழை நீக்கம்

முதலில் இவற்றை முயலுங்கள். சரியாகவில்லை என்றால் எங்களுக்கு WhatsApp செய்யுங்கள் அல்லது அழையுங்கள்.

ஷ்ரெடர் ஜாம் ஆகிவிட்டது
  1. ரிவர்ஸ் மூலம் கழிவைப் பின்னால் தள்ளுங்கள்.
  2. கொஞ்சம் தண்ணீர் ஊற்றுங்கள். முன்னும், பிறகு ரிவர்ஸிலும் சில முறை ஓட்டுங்கள்.
  3. இன்னும் ஜாமா? இயந்திரத்தை ஆஃப் செய்யுங்கள்.
  4. பிளேடுகள் நிற்கும்வரை காத்திருங்கள்.
  5. பிளேடுகளுக்குக் கீழே பிளாஸ்டிக், உலோகம் அல்லது காய்ந்த கழிவு இருக்கிறதா எனப் பாருங்கள்.
  6. அதை ஸ்க்ரேப்பர் கருவியால் எடுங்கள். கையை ஒருபோதும் விடாதீர்கள்.
  7. இன்னும் ஜாமா? எங்களை அழையுங்கள்.
ஷ்ரெடர் அடிக்கடி அடைத்துக்கொள்கிறது
  1. ஒரு முறைக்கு 5 கிலோ மட்டும், கொஞ்சம் கொஞ்சமாகப் போடுங்கள்.
  2. முதலில் பிளாஸ்டிக், உலோகம், கடினமான பொருட்களை எடுத்துவிடுங்கள்.
  3. ஒவ்வொரு பேட்சுக்குப் பிறகும் பிளேடுகளைக் கழுவுங்கள்.
முன் கதவு வழியாகக் கழிவு சிந்துகிறது
  1. கழிவு போடுவதை நிறுத்துங்கள்.
  2. அடுத்த முறை ஃபீடிங் அளவுக்கு மேல் நிரப்பாதீர்கள்.
Automatic mode தொடங்கவில்லை
  1. முன் கதவுகளைச் சரியாக மூடிப் பூட்டுங்கள்.
  2. ஈரப்பதம் 0 காட்டுகிறதா? ஈரப்பத சென்சாரைச் சுத்தம் செய்யுங்கள்.
  3. இன்னும் தொடங்கவில்லையா? எங்களை அழையுங்கள். கண்ட்ரோல் பேனலைத் திறக்காதீர்கள்.
ஈரப்பதம் 0 காட்டுகிறது
  1. ஆஃப் செய்து, ஈரப்பத சென்சாரைச் சுத்தம் செய்யுங்கள்.
  2. இன்னும் 0-வா? எங்களை அழையுங்கள்.
சூடு ஏறவில்லை
  1. எங்களை அழையுங்கள். வெப்ப சென்சார் அல்லது ஹீட்டரை டெக்னீஷியன் பார்க்க வேண்டும்.
கதவுகள் மூடியிருந்தும் சிவப்பு விளக்கு எரிகிறது
  1. முன் கதவுகளை நன்றாக மூடிப் பூட்டுங்கள்.
  2. இன்னும் சிவப்பா? எங்களை அழையுங்கள். கதவு சென்சாரைச் சரிசெய்ய வேண்டும்.
இயந்திரம் ஆன் ஆகவில்லை
  1. மெயின் MCB ஆன் ஆக இருக்கிறதா எனப் பாருங்கள்.
  2. பின்பக்க கீ சுவிட்ச் ஆன் ஆக இருக்கிறதா எனப் பாருங்கள்.
  3. பவர் பிளக் நன்றாகச் செருகியிருக்கிறதா எனப் பாருங்கள்.
  4. இன்னும் ஒன்றும் இல்லையா? எங்களை அழையுங்கள். கண்ட்ரோல் பேனலைத் திறக்காதீர்கள்.
ஸ்கிரீன் வரவில்லை
  1. மெயின் MCB ஆன் ஆக இருக்கிறதா எனப் பாருங்கள்.
  2. 10 விநாடி காத்திருங்கள்.
  3. இன்னும் வரவில்லையா? எங்களை அழையுங்கள். ஸ்கிரீனில் தண்ணீர் படக் கூடாது.
இயந்திரத்தில் ஷாக் அடிக்கிறது
  1. இயந்திரத்தை மீண்டும் தொடாதீர்கள்.
  2. மெயின் MCB-ஐ ஆஃப் செய்யுங்கள்.
  3. உடனே எங்களை அழையுங்கள். நாங்கள் சரிசெய்யும்வரை இயந்திரத்தைப் பயன்படுத்தாதீர்கள்.
MCB அடிக்கடி டிரிப் ஆகிறது
  1. அதை ஆஃப் நிலையிலேயே விடுங்கள்.
  2. எங்களை அழையுங்கள். வயரிங்கை டெக்னீஷியன் பார்க்க வேண்டும்.
காற்று வெளியேறும் இடத்தில் கெட்ட வாசனை
  1. ப்ளோவர் மெஷைச் சுத்தம் செய்யுங்கள்.
  2. இன்னும் வாசனையா? எங்களை அழையுங்கள். ஃபில்டரை மாற்ற வேண்டியிருக்கலாம்.
அதிக நீராவி அல்லது தண்ணீர் கசிவு
  1. கதவுகள் இறுக்கமாக மூட, அவற்றின் உள்பக்கத்தைச் சுத்தம் செய்யுங்கள்.
  2. இன்னும் கசிகிறதா? எங்களை அழையுங்கள். ப்ளோவரைச் சோதிக்க வேண்டும்.
கீச் சத்தம், தட தட சத்தம் அல்லது இரைச்சல்
  1. இயந்திரத்தை ஆஃப் செய்யுங்கள்.
  2. எங்களை அழையுங்கள். பேரிங், கியர்பாக்ஸ் அல்லது ப்ளோவரை டெக்னீஷியன் பார்க்க வேண்டும்.
இயந்திரம் அதிகமாக ஆடுகிறது
  1. இயந்திரம் சக்கரத்தில் இல்லாமல் மவுண்ட் மேல் நிற்கிறதா எனப் பாருங்கள்.
  2. தரை சமமாக இருக்கிறதா எனப் பாருங்கள்.
  3. சக்கரங்கள் உடையவில்லையா எனப் பாருங்கள்.
  4. இன்னும் ஆடுகிறதா? எங்களை அழையுங்கள்.
மெதுவாக ஓடுகிறது அல்லது அடிக்கடி நிற்கிறது
  1. எங்களை அழையுங்கள். மின் சப்ளையைச் சோதிக்க வேண்டும்.

கண்ட்ரோல் பேனலைத் திறக்கவோ வயரிங்கைத் தொடவோ வேண்டாம். மின் அதிர்ச்சி உணர்ந்தால், உடனே மெயின் MCB-ஐ அணைத்து எங்களை அழையுங்கள்.