இயந்திரத்தைத் தொடங்குங்கள்

கம்போஸ்டர் · தொடக்க நடைமுறை

  1. கையுறையும் பாதுகாப்புக் கண்ணாடியும் போடுங்கள்.தூசி மாஸ்க், பாதுகாப்பு ஷூவும் போடுங்கள். தொளதொள உடை, நகை வேண்டாம்.
  2. இயந்திரம் சக்கரத்தில் இல்லாமல் மவுண்ட் மேல் நிற்கிறதா எனப் பாருங்கள்.இல்லையென்றால், டேம்பர் நட்டைத் திருப்பி வைப்ரோ மவுண்ட்களை இறக்குங்கள்.
  3. சக்கரங்களைப் பூட்டுங்கள்.இயந்திரம் நகரக் கூடாது.
  4. பவர் பிளக்கை இயந்திரத்தில் நன்றாகச் செருகுங்கள்.மெயின் MCB-யிலிருந்து வரும் சிவப்பு பிளக் அது.
  5. பிரஷால் ப்ளோவர் மெஷைச் சுத்தம் செய்யுங்கள்.தூசி முழுவதையும் பிரஷால் எடுங்கள்.
  6. கம்போஸ்டிங் அறையைத் துடைத்துச் சுத்தம் செய்யுங்கள்.தூசி அல்லது எண்ணெய் இருந்தால் எடுங்கள்.
  7. கிளீனிங் தட்டு வெளியே இருக்கிறதா எனப் பாருங்கள்.போன முறை சுத்தம் செய்தபோது உள்ளே விட்டிருக்கலாம். அரைக்கும் முன் வெளியே எடுங்கள்.
  8. ஷ்ரெடர் ஹாப்பர் தட்டைச் சரியாக வையுங்கள்.மேல் கதவு வழியாகச் சரியாகப் பொருத்துங்கள்.
  9. எல்லாக் கதவுகளையும் மூடிப் பூட்டுங்கள்.
  10. மெயின் MCB-ஐ ஆன் செய்யுங்கள்.
  11. கீ சுவிட்சை ஆன் செய்யுங்கள்.இது இயந்திரத்தின் பின்பக்கம் உள்ளது.
  12. 10 விநாடி காத்திருங்கள்.ஸ்கிரீன் ஆன் ஆகி முதல் பக்கத்தைக் காட்டும்.
  13. இயந்திரம் தொடங்கவில்லையா? கண்ட்ரோல் பேனலுக்குள் உள்ள MCB ஆஃப் ஆகியிருக்கலாம். பேனலைத் திறக்காதீர்கள். எங்களை அழையுங்கள்.

  14. ஒருவர் மட்டுமே இயந்திரத்தை ஓட்ட வேண்டும். குழந்தைகளையும் வெளியாட்களையும் தள்ளி வையுங்கள்.

கண்ட்ரோல் பேனலைத் திறக்கவோ வயரிங்கைத் தொடவோ வேண்டாம். மின் அதிர்ச்சி உணர்ந்தால், உடனே மெயின் MCB-ஐ அணைத்து எங்களை அழையுங்கள்.